0%
NewsSri LankaTrending News

வைத்தியர் ஷாபி விவகாரம்: முறைப்பாடளித்த தாய்மாரில் இருவர் கர்ப்பிணிகளாகினர்

(எம்.எப்.எம்.பஸீர்)

சட்ட விரோதமாக கருத்தடை செய்ததாக குருணாகல் போதனா வைத்தியசாலையின் சிரேஷ்ட பிரசவ மற்றும்  பெண்ணியல்  விவகார வைத்தியர் மொஹம்மட் ஷாபிக்கு எதிராக முறைப்பாடளித்த இரு பெண்கள் தற்போது கர்ப்பம் தரித்துள்ளனர்.

தாம் வைத்தியர் ஷாபி ஊடாக சிசேரியன் சத்திர சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அவ்வாறு சிசேரியல் செய்யப்பட்டு அடுத்த குழந்தையைப் பெற கடந்த இரு வருடங்களாகியும் குழந்தை கிடைக்கவில்லை எனவும் அதனால் தாம் வைத்தியரால் கருத்தடை செய்யப்ப்ட்டுள்ளோமா என சந்தேகம் எழுவதாகவும் அந்த  இரு தாய்மாரும் முறைப்பாடளித்துள்ளனர்.

அவர்களது  முறைப்பாட்டை பதிவு செய்த சி.ஐ.டி., பின்னர் அவர்களை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துவது குறித்து அறிவிக்க தொலைபேசியில் அழைத்துள்ளனர். அப்போது அவ்விரு தாய்மாரும், ‘ சேர்…. எமக்கு அந்த சோதனைகளை அவசியமில்லை…நாம் கர்ப்பம் தரித்துவிட்டோம்.’ என பதிலளித்ததாக சி.ஐ.டி. அதிகாரிகள் கூறினர்.

எது எவ்வாறிருப்பினும் இரு பெண்கள் கர்ப்பம் தரித்துள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு தவல்கள் கிடைத்துள்ள நிலையில் அது தொடர்பில் விசாரணைகளை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.

அத்துடன் ஷாபிக்கு எதிராக முறைப்பாடளித்த பெண்கள் அனைவரிடமும் மீள வாக்கு மூலம் பெறுவதற்கான நடவடிக்கையையும் ஆரம்பித்துள்ளனர்.

virakesari

Get Live Updates
மேலும் வாசிக்க

Qtv Network

கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழ்பேசும் முஸ்லிம்கள் மற்றும் அடக்கியொடுக்கப்படும் சிறுபான்மை மக்களுக்கான ஊடகமாக Qtv சமுக வலைத்தளங்களில் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம் மக்களுக்கு நடக்கும் பிரச்சனைகளை வெளிக்கொனர்வதோடு, இஸ்லாமிய வரயறைகளை பாதிக்காது நவீன தொழிநுட்பங்களை உள்வாங்கி தனித்துவமான நிகழ்ச்சிகளை வழங்குதல்

Related Articles

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker