0%
NewsSri LankaTrending News

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரம் தொடர்பில் மட்டக்களப்பில் 2150 முறைப்பாடுகள்

எம்.எஸ்.எம்.நூர்தீன்

முஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பான கலாசாரத் தடையை ஏற்படுத்துவது அடிப்படை உரிமை மீறலெனத் தெரிவித்து மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு பெண்கள் மற்றும் அரச, அரசசார்பற்ற நிறுவனங்கள் ,தனித் தனியாகவும் சுமார் 2150 முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டிருப்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.

முஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பான கலாசாரத்தில் எந்த மாற்றமும் செய்யக் கூடாதெனவும், நிகாப் மற்றும் புர்கா போன்ற ஆடைக் கலாசாரத்தினை தடை செய்ய எடுக்கும் நடடிவக்கையை உடமையாக சட்டமாக்கக் கூடாதெனத் தெரிவித்து காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த பெண்கள் மட்டக்களப்பு மனித உரிமை அலுவலகத்தில் முறைப்பாடுகளைச் செய்துள்ளனர்.

இந்த முறைப்பாடுகளில் சுமார் 996 முறைப்பாடுகள் தனித்தனியாக பெண்களினால் செய்யப்பட்டுள்ளதாகக் கூறிப்பிட்ட மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளர்,இலங்கை அரசியல் அமைப்பில் மூன்றாம் அத்தியாயத்தில் அடிப்படை உரிமையில் ஒர் உறுப்புரை 10, 12 பிரிவுகள் மீறப்படுவதாக கருதுவ தாகவும் அம்முறைப் பாட்டில் தெரிவித்துள்ளன.இம்முறைப்பாடுகள் பற்றி மனித உரிமை ஆணைக்குழுவின் தலைமை காரியாலயத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் மேலும் தெரிவித்தார்.

Get Live Updates
மேலும் வாசிக்க

Qtv Network

கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழ்பேசும் முஸ்லிம்கள் மற்றும் அடக்கியொடுக்கப்படும் சிறுபான்மை மக்களுக்கான ஊடகமாக Qtv சமுக வலைத்தளங்களில் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம் மக்களுக்கு நடக்கும் பிரச்சனைகளை வெளிக்கொனர்வதோடு, இஸ்லாமிய வரயறைகளை பாதிக்காது நவீன தொழிநுட்பங்களை உள்வாங்கி தனித்துவமான நிகழ்ச்சிகளை வழங்குதல்

Related Articles

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker