0%
NewsSri LankaTrending News

பெடிகலோ பல்கலைக்கழகத்திற்குu எதிராக ரத்னா தேரர் தலைமையில் மட்டக்களப்பு – கிரானில் ஆர்பாட்டம்.

ஹிஸ்புல்லாவின் முயற்சியில் உருவான பெடிகலோ  பல்கலைக்கழகத்தை அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருமாறு
கோரி, மட்டக்களப்பு – கிரானில், இன்று (19) பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கிரான் – புலிபாந்தகல் சுற்றுவட்டத்தில் ரத்னா தேரர் தலைமையில்  ஒன்றுகூடிய சிங்கள, தமிழ் மதகுருமார்களும் பொதுமக்களும் மேற்படி கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு – புனானைப் பகுதியில், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவால் நிர்மாணிக்கப்படும் பல்லைக்கழகமானது இஸ்லாமியத் தீவிரவாத தற்கொலைதாரிகளை உருவாக்குவதற்கு மதவாத உரமூட்டும், மூளைச்சலவை செய்யும் கோட்பாடு சார்ந்த இடமாகுமென, அவர்கள் இதன்போது குற்றஞ்சாட்டினர்.

தொழிற்பயிற்சி நிலையமொன்றை ஆரம்பிப்பதாகக் கூறி, தான் தலைவராக நிர்வகிக்கும் ஹிரா நிறுவனத்தினூடாக ஷரியா பல்கலைக்கழகமொன்றை ஆரம்பித்துள்ளார் எனவும் இதை உடனடியாகத் தடை செய்யுமாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோரினர்.

“ஹிஸ்புல்லாவின் பல்லைக்கழகத்தை அரசாங்கத்தின் கீழ் கொண்டுவருவோம்”, “கிழக்கு மாகாண மக்களை, தீவிரவாதிகளிடமிருந்து பாதுகாப்போம்” போன்ற வாசகங்கள் அச்சிடப்பட்ட பதாதைகளை, இந்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்டோர் ஏந்தியிருந்தனர்.

  

Get Live Updates
மேலும் வாசிக்க

Qtv Network

கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழ்பேசும் முஸ்லிம்கள் மற்றும் அடக்கியொடுக்கப்படும் சிறுபான்மை மக்களுக்கான ஊடகமாக Qtv சமுக வலைத்தளங்களில் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம் மக்களுக்கு நடக்கும் பிரச்சனைகளை வெளிக்கொனர்வதோடு, இஸ்லாமிய வரயறைகளை பாதிக்காது நவீன தொழிநுட்பங்களை உள்வாங்கி தனித்துவமான நிகழ்ச்சிகளை வழங்குதல்

Related Articles

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker