0%
NewsSri LankaTrending News

இந்த விமானம் எந்த நாட்டுக்குரியது? எதற்காக இலங்கை வருகிறது?

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு சில நாள்களுக்கு முன்னர் வருகைத்தந்திருந்த பெயர் குறிப்பிடப்படாத
விமானம் தொடர்பில் எந்தவிதமான தகவல்களும் இதுவரை வெளியிடப்படாத நிலையில், அரசாங்கம் இதுகுறித்த தகவல்களை உடனடியாக வெளியிட வேண்டுமென, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.

பாதுக்க பிரதேசத்தில் இன்று (25) இடம்பெற்ற வேலைத்திட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த விமானம் சில நாள்களுக்கு முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகைதந்திருந்து மீண்டும் அங்கிருந்து கிளம்பியுள்ளதுடன், அவ்விமானம் எந்த நாட்டுக்குரியது, எதற்காக வருகைத்தந்திருந்தது போன்ற விடயங்கள் தெரியாத நிலையில் அதில் வந்தவர்கள் யார், இங்கு என்ன செய்தார்கள் போன்ற தகவல்களை உடனடியாக வெளியிட வேண்டுமென வலியுறுத்தினார்.

madawalanews

Get Live Updates
மேலும் வாசிக்க

Qtv Network

கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழ்பேசும் முஸ்லிம்கள் மற்றும் அடக்கியொடுக்கப்படும் சிறுபான்மை மக்களுக்கான ஊடகமாக Qtv சமுக வலைத்தளங்களில் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம் மக்களுக்கு நடக்கும் பிரச்சனைகளை வெளிக்கொனர்வதோடு, இஸ்லாமிய வரயறைகளை பாதிக்காது நவீன தொழிநுட்பங்களை உள்வாங்கி தனித்துவமான நிகழ்ச்சிகளை வழங்குதல்

Related Articles

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker