இந்துக்களை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்வது இஸ்லாத்திற்கு எதிரானது!

இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரைக் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்வது முஸ்லிம் மதத்துக்கு விரோதமானது. முஸ்லிம் வரலாற்றில் இதுபோன்ற கட்டாய மதமாற்றத்துக்கு இடமில்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசியுள்ளார்.
பாகிஸ்தானில் நேற்று தேசிய சிறுபான்மையினர் தினம் கடைபிடிக்கப்பட்டது. இதுதொடர்பான நிகழ்ச்சி இஸ்லாமாபாத்தில் உள்ள அதிபர் மாளிகையில் நேற்று நடந்தது.
இதில் பங்கேற்ற பிரதமர் இம்ரான் கான் பேசியதாவது:
”பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினர் மதவழிபாட்டுத் தலங்கள் பாதுகாக்கப்படும். தங்கள் மதவிழாக்களை, பண்டிகைகளை எந்தவிதமான இடையூறும் இன்றி கொண்டாடி மகிழவும் அவர்களுக்குள்ள உரிமை பாதுகாக்கப்படும்,
இறைத்தூதர் முகமது நபி ஆட்சியில் சிறுபான்மையினருக்கு உரிய மத சுதந்திரம் வழங்கப்பட்டது. அவர்களின் மதவழிபாட்டுத் தலங்கள் பாதுகாக்கப்பட்டன.
ஒரு இந்துப் பெண்ணைத் திருமணம் செய்தோ அல்லது வேறு சிறுபான்மையினரைத் திருமணம் செய்தோ, முஸ்லிம் மதத்துக்கு எப்படி நாம் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ய முடியும். அல்லது துப்பாக்கி முனையில் மிரட்டி மதமாற்றம் செய்ய முடியுமா?
இந்தச் செயல் அனைத்தும் முஸ்லிம் மதத்துக்கு விரோதமானது. இறைவுன் அனுப்பிய இறைத்தூதர்களிடம், யார்மீதும் நம்பிக்கைகளை கட்டாயப்படுத்தி திணிக்கக் கூறவில்லை.
அதன்படிதான் இறைத்தூதர்கள் நடந்தார்கள். இறைத்தூதர்களின் பணி கடவுளின் வார்த்தைகளைப் பரப்புவது மட்டுமே.
பாகிஸ்தானை மதினாவின் மாதிரியாக மாற்றுவேன். அனைத்து மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படும். சட்டத்தின் ஆட்சி நடக்கும். அனைத்துக் குடிமக்களுக்கும் சமமான உரிமை வழங்கப்படும்”
என இம்ரான் கான் பேசியுள்ளது
உலக மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இங்குள்ள ஜெய் ஸ்ரீராம் மிருகக் கும்பல்களுக்கு செருப்படி🤭 கொடுப்பதுபோல இம்ரான் கானின் பேச்சு அமைந்துள்ளது.
இந்துக்களின் மனம் கவரும் விஷயத்தில்
இம்ரான் கான் வீசிய பந்தில்
இந்திய பிரதமர் மோடி கிளீன் போல்ட்!😀
பாகிஸ்தான் குறித்த
சங் பரிவாரர்களின் வெறுப்புப் பிரச்சாரப் பந்துகளை இம்ரான் கான் சிக்ஸர்களாக மாற்றியுள்ளார்.💪